0
 (எஸ்.பி.நாதன்)

செவிப்புலன் வலுவற்றோருக்கான சட்டம் பற்றிய இலவச ஆலோசனை வழிப்புணர்வுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (14) மட்டக்களப்பு செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெற்றது.

குடும்ப வன்முறை, உரிமைகள் உட்பட்ட பல்வேறு பிரச்சினைகளை எந்த நீதிமன்றத்தில் அணுகுதல் பற்றி இலவச சட்ட ஆணைக்குழுவின் மட்டக்களப்பு நிலையத்தின் பொறுப்பாளர்களான  சட்டத்தரணிகள் மிருதினி சிறிஸ்குமார் மற்றும் காமலிடா சசிரூபன் ஆகியோர் விளக்கமளித்தனர்.

அரச உத்தியோகத்தில் இல்லாத மாதாந்தம் ரூபாய் 15,000 குறைவான சம்பளம் பெறும் ஊழியர்களும் இலவச சட்ட ஆலோசனைகளை பெற உரிமையுடையவர்கள் என சட்டத்தரணி மிருதினி சிறிஸ்குமார் மேலும் தெரிவித்தார்.

இதில் பாரபட்சம் காட்டப்படாதிருப்பதற்கான உரிமை, பெண்களை சோதனை செய்தல், பெண்களைத் தடுத்து வைத்தல், இருதார மணம், 18 வயதுக்கட்பட்ட திருமணம், விவாகரத்து, பொது இடங்கள, தொழில் புரியும் இடம், சொற்கள் மூலமான பாலியல் தொல்லைகள், பாலியல் வல்ருறவு, விபச்சாரத்திற்கு அழைத்து செல்லுதல், ஆட்கடத்தில், பெண்களிடம் பாலியல் சுரண்டல் மற்றும் தகாத புணர்ச்சி என்பன பற்றி அவர்களுக்குரிய சைகை முறையில் விளக்கமளிக்கப்பட்டன.

அவர்களால் கேட்கப்பட்ட பல கேழ்விகளுக்கு அவர்களுக்குரிய சமிஞ்ஞை முறையிலான விளக்கத்துடன் விடையளிக்கப்பட்டன.சைகைகள் மூலம் இவர்களுக்கான விளக்கத்ததை துர்க்கா பிரதீபன் வழங்கினார். இலவச சட்ட ஆணைக்குழுவின் மட்டக்களப்பு நிலையத்தின் உத்தியோகத்தர் எஸ். அருள்விழியும் கலந்து கொண்டார்.







Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top