(எஸ்.பி.நாதன்)
கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரித்தல் மற்றும் கழிவுகள் சேகரித்தல் தொடர்பில் மட்டக்களப்பு மாநகர சபையினால் மக்களுக்கு தெளிவுபடுத்தும் துண்டுப்பிரசுரங்கள் நேற்று வெள்ளிக்கிழமை (24) அரசடியில் வழங்கப்பட்டன.
செயல்முறைகளை இலகுவாக்கும் நோக்கொடு உக்கக்கூடிய கழிவுகள், உக்காத கழிவுகள் மற்றும் மீள்சுழற்சிக்குரிய கழிவுகள் என வகைப்படுத்தி வழங்குமாறு பொது மக்களிடம் கேட்கப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் மாநகரசபையின் திருப்பெருந்துறை திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் மாதாந்தம் 3500 கிலோ சேதனப் பசளை உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுவதாக ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது சுகாதார வாழ்விற்கு சேதனப் பசளைகளின் முக்கியத்துவம் பற்றியும், வீடுகளில் இயற்கை உரம் தயாரிப்பதற்கான செய்முறைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களும் தொழிலாளர்களினால் இதன்போது வழங்கப்பட்டன.
ஐரோப்பிய யூனியனின் உதவியுடன் யுனொப்ஸ் நிறுவனத்தின் ஊடாக அமுல்படுத்தப்பட்டு வரும் இந்த நடவடிக்கையின் போது கழிவுகளை குறித்த பிரதேசங்களில் சேகரிப்பதற்கான தினங்கள் அடங்கிய அட்டைகளும் பொது மக்களிற்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment