(பாண்டியன் & சச்சு)
இன்று மட்டக்களப்பு செளக்கிய பராமரிப்பு விஞ்ஞானபீட பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. பணத்துக்காக அப்பாவிமக்களின் வாழ்கையை மாலபேக்கு பரிசளிக்கவிருக்கும் வைத்திய சங்கத்தினுடைய செயலை கண்டித்து இந்த ஆர்பாட்டம் இடம்பெற்றது.
பிற்பகல் ஒருமணிளவில் பல்கலைக்கழக முன்வீதியில் கூடிய மாணவர்கள் ஜனாதிபதியும் கல்வியமைச்சரும் இதில் தலையிட்டு எங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென அவர்கள் தெரிவித்தனர்.
வைத்திய சங்கமே மாலபேக்கு அனுமதி வழங்காதே, மாலபே சட்ட விரோத பட்டக்கல்வியை நிறுத்து, கல்வியை விற்பதை நிறுத்து என பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கிய வண்ணம் மாணவர்கள் கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக சென்று தங்கள் எதிர்ப்பினை காட்டியபடி கலைந்து சென்றனர்.
Post a Comment