(கங்கா)
மட்டு பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ''லண்டன் நம்பிக்கை ஒளி'' நிறுவனத்தின் நிதி உதவியுடன் மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை, கடுக்காமுனை, பண்டாரியாவெளி, முனைக்காடு, முதலைக்குடா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 10 மீனவர்களுக்கு தங்களின் வாழ்வாதாரத்தினைக் கட்டியெழுப்புகின்ற நோக்கில் மீன்பிடி உபகரணங்களான தோணி வலை என்பன வழங்கி வைக்கப்பட்டன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனின் வேண்டுதலின் பேரில் லண்டனைச் சேர்ந்த நம்பிகை ஒளி என்ற அமைப்பு குறித்த மீன்பிடி உபகரணங்களுக்கான நிதி உதவியினை இலங்கையில் உள்ள உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பின் ஊடாக வழங்கி இருந்தது.
குறித்த மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த (19.10.2014) பண்டாரியாவெளி மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பா.அரியநேத்திரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மீனவர்களுக்கான மீன்பிடி உபகரணங்களை வழங்கிவைத்தார்.





Post a Comment