பதுளை மாவட்ட, மீறியாபெத்த, கொஸ்லந்த பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற பாரிய மண்சரிவில் சிக்கி தமது உறவுகளின் உயிர் மற்றும் உடமைகளை இழந்து உயிர்மட்டும் தப்பினோம் என்று ஏங்கிகொண்டுடிருக்கும் எமது உறவுகளுக்கு நாம் எமது அழ்ந்த அனுதாபத்தினை மீண்டுமொருமுறை தெரிவிப்பதுடன் , அதேவேளையில் ஆதரவற்றிருக்கும் உறவுகளுக்கு உதவிக்கரங்களையும் நீட்டவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றமை யாரும் அறிந்த உண்மையே....
இவ்வாறு பாதிக்கப்பட்டு அனாதரவாக்கப்பட்ட எம் உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்ட மட்டக்களப்பிலிருந்து செயற்படும் நடுநிலையான செய்தி சேவையாகிய battifm.com பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பணியினை வாசகர்களாகிய உங்களிடமிருந்து பெற்று உரிய உறவுகளிடம் சேர்க்க தீர்மானித்துள்ளது.
தாராள மனம்கொண்ட தங்களால் வழங்கப்படும் உடு துணிகள் மற்றும் உலருணவு பொருட்களை நாம் அவ்வப்போது எமது செய்தி சேவையூடாக அறியத்தரும் இடங்களில் வழங்கிவைக்கலாம் என்பதனை அறியத்தருகின்றோம்.
எமது குலாத்தினரால் முன்னெடுக்கப்படுகின்ற இவ் நிவராணப் பணியில் உங்களின் உதவிகளையே பெரிதும் நாடிநிற்கின்றோம்.
எமக்கு நினைவு இருக்குமென நினைக்கின்றோம் நாம் எமது பிரதேசத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட சுனாமி மற்றும் 2010 ஆண்டு ஏற்பட்ட வெள்ளபெருக்கு என்பவற்றால் முற்றாக பாதிக்கப்பட்டு அனாதரவற்றிருந்த வேளையில் , இன்று இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கும் உள்ளங்கள் தங்களால் இயன்ற உதவிகளை திரட்டி எமக்கு அனுப்பிவைத்திருந்தார்கள்.
இவ்வாறான இயற்கையின் அழிவகளில் பாதிக்கப்பட்ட எமக்கு இனம், மதம், சாதி, குலபேதமின்றி உதவிசெய்த இம் மக்களுக்கு இன்று நாம் உதவிகரம் நீட்ட தீர்மாணித்துள்ளதுடன், battifm.com குழாத்தினருடன் நீங்களும் இணைந்து உங்களது உதவிகளையும் வழங்கலாம் என்பதனை தங்களுக்கு அறியத்தருகின்றோம்.
''மண்ணுக்குள்ளே மனிதன் அடங்குவது மரணத்தின் நிதர்சனம்'' மண்ணே வந்து உயிர்பறித்த செய்தி கேட்டு ஒருகனம் நின்றதே எம் சுவாசம்.
மட்டக்களப்பில் தங்களது நிவாரண உதவியினை வழங்க விரும்புவோர் கீழ் காணும் முகவரியில் வழங்கலாம் :-
நாவற்குடா,
மட்டக்களப்பு.
தொடர்புகளுக்கு - 077 322 6897
அம்பாறையில் தங்களது நிவாரண உதவியினை வவிரும்புவோர் கீழ்காணும் முகவரியில் வழங்கலாம் :-
திருவள்ளுவர் வீதி,
பாண்டிருப்பு,
கல்முனை.
தொடர்புகளுக்கு - 077 658 8780
Post a Comment