0
(த.லோகதக்சன்)

மட்டக்களப்பு சுகாதார வைத்தியர் அதிகாரிகள் காரியாலயம் மற்றும் சிறுவர்களுக்கான சர்வதேச நிவாரண அவசர பிரிவு ஸ்ரீ நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த வைத்திய முகாம் ஸ்ரீ அமைப்பின் தேசிய இயக்குனர் அனிற்றாரமேஸ் தலைமையில் மட்டக்ளப்பு வை.எம்.சீ.ஏ பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

சர்வதேச சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் முகமாக ஸ்ரீ அமைப்பானது மேற்கொண்டுவரும் சிறுவர்களுக்கான போசாக்கு மற்றும் கல்விக்கான உதவி ஆகிய திட்டங்களின் மட்டக்களப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சின்னஊறனி, நாவலடி, கொக்குவில், நாவற்குடா, மஞ்சந்தொடுவாய் ஆகிய கிராமங்களின் குடும்பநல உத்தியோகத்தர்கள் உதவியின் மூலம் தெரிவு செய்யப்பட்ட மூன்று தொடக்கம் எட்டு வயது வரையுள்ள போசாக்கு நிறை குறைந்த நூற்றுக்கு அதிகமான குழந்தைகள் இவ்வைத்திய முகாமில் கலந்து கொண்டு பல் சுகாதார வைத்தியம் மற்றும் போசாக்கு நிறை குறைபாட்டிற்கான தீர்வுகள் போன்ற விடயங்களை வைத்திய அதிகாரிகள் மூலம் பல ஆலோசனைகளை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வைத்திய முகாமில் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தின் சார்பாக வைத்தியர்களான எஸ்.ரஞ்சன், எஸ்.மதனாழகன் அத்துடன் எஸ்.உதயகுமார் ஆகியோரும், பிரதேச குடும்பநல உத்தியோகத்தர்களும், ஸ்ரீ நிறுவனத்தின் சார்பில் வெளிக்கள உத்தியோகத்தர்களும், தொண்டர்களுமாக பலர் கலந்து கொண்டனர்.













Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top