(பொன்முடி)
வந்தாறுமூலை கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் புலிக்கூத்து ஆற்றுகை நிகழ்வானது கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை சிரேஷ;ட விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் நுண்கலைத்துறை இறுதி வருட மாணவியான ந.துஷயந்தியின் இறுதி வருட ஆய்வின் ஒரு பகுதியாகவே (16) வியாழக்கிழமை புலிக்கூத்து ஆற்றுகை நடைபெற்றன.

இவ்வாற்றுகை நிகழ்வில் ஆற்றுகையாளர்களாக அமைபவர்கள் நுண்கலைத்துறை மாணவர்களும் விரிவுரையாளர்கள் பங்குபற்றியிருந்தனர். இந்த புலிகூத்து ஆனது மரபுவழி அண்ணாவியார்களினதும், புலிக்கூத்துக் கலைஞர்களினதும் பயிற்றுவிப்பின் கீழ் முறைப்படி பயின்றே இவ்வாற்றுகை நிகழ்வு நடைபெற்றன.
கல்குடாத்தொகுதியில் ஆற்றுகை செய்யப்படும் புலிக்கூத்து கலைவடிவம் பற்றியதாக கொண்டமைந்தாக நடைபெற்றன. இதனடிப்படையில் வந்தாறுமூலை - பலாச்சோலை, சித்தாண்டி, வாகரை-அம்மன்தனாவெளி போன்ற கிராமங்களில் ஆடப்படுகின்ற வெவ்வேறுபட்ட புலிக்கூத்து ஆற்றுகை வடிவங்களில், வந்தாறுமூலை - பலாச்சோலை, வாகரை - அம்மன்தனாவெளி முதலிய கிராமங்களில் ஆடப்படும் இரு வடிவமே இன்று நடைபெற்ற புலிக்கூத்தின் முக்கிய சிறப்பம்சம்.
இந்நிகழ்வில் நுண்கலைத்துறை தலைவர் கலாநிதி.வ.இன்பமோகன், விரிவுரையாளர் சு.சந்திரகுமார் வருகைவிரிவுரையாளர் ப.ராஜதிலகன் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், புலிக்கூத்துக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட புலிக்கூத்து அண்ணாவியார்கள் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட புலிக்கூத்து அண்ணாவியார்கள் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment