0

(கிருஷ்மன்)


அம்பாரை அக்கரைப்பற்று பிரதேசத்தின் புகழ்பூத்த சிரேஷ்ட அறிவிப்பாளரும், கவிஞரும், கதாசிரியரும் சமூகசேவையாளனுமாகிய  ஜி.கே.யோகச்சந்திரன் நேற்று(31) தனது 57வயதில் இறைவனடி சேர்ந்தார்.

தன்னலம் கருதாது மக்களுக்காய் உழைத்த அன்னாரது இழப்பினால்  சோகமடைந்துள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தின் பல்வேறு சமூக அமைப்புக்களும் மக்களும் இறுதி அஞ்சலியினை செலுத்தி வருகின்றனர்.

அன்னாரின் இறுதிச்சடங்கு இன்று காலை ஆலையடிவேம்பு வாச்சிக்குடாவிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அக்கரைப்பற்று இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top