(எஸ்.பி.நாதன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத்தை அபிவிருத்தி செய்வதற்காக மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்களுக்கு முன்பாக விவசாய நடமாடும் சேவைகள் பற்றிய விழிப்பூட்டல் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்றது.
தேசிய விவசாய உற்பத்தியில் பாரிய பங்களிப்பை செய்து வரும் மட்டக்களப்பு மாவட்டம் விவசாயத்தில் ஏனைய மாவட்டங்களை விட் முன்னேற்றம் அடைந்துள்ளது என விவசாய அமைச்சின் செயலாளர் கலாநிதி முகாஸ் முல்லா தெரிவித்தார்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கிணங்க விவசாய அமைச்சு, விவசாயத் திணைக்களம் மற்றும் கமநலசேவைகள் திணைக்களம் என்பன இணைந்து மாவட்ட ரீதியாக நடாத்தப்படவுள்ள மாநாட்டில் முதலாவது மாநாடு இதுவென அவர் மேலும் தெரிவித்தார்.
இதில் விவசாயிகளுக்கு மானிய அடிப்படையிலான கடன் திட்டம், உரம், பூச்சி மற்றும் களை நாசினிகள் கொள்வனவு செய்வதற்கான வசதிகள் பற்றிக் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது கலந்து கொண்ட விவசாயிகளால் தாங்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் பற்றி விபரித்தனர்.
மாவட்ட அரச அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ், மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன், விவசாய அமைச்சின் மேலதிகச் செயலாளர்களான கலாநிதி நிமால் திஸ்ஸநாயக்கா மற்றும் கலாநிதி ஆர்.எஸ். விஜயசேகர, மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எஸ். உகநாதன் மற்றும் கமநல சேவைகள் திணைக்களத்தின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment