(எஸ்.பி.நாதன்)
ஜனவரியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களின் பதிவுகளை பரிசீலிக்கும் வேலைகள் இன்று சனிக்கிழமை (18) மட்டக்களப்பு தேர்தல்கள் திணைக்களத்தில் நடைபெற்றன.
2014 ஆம் ஆண்டிற்குரிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கபடாமல் விடுபட்டு இருந்தவர்களின் பெயர்களை இணைப்பதற்கான வேலைகள் இடம்பெற்றன.
விடுபட்டவர்களின் பிறப்பத்தாட்சிப் பத்திரம், திருமணச் சான்றிதழ், கடைசியாக வாக்களித்த வாக்குச் சீட்டின் விபரங்கள், கிராம சேவகரின் அத்தாட்சிப் படுத்தப்பட்ட பத்திரங்கள் என்பன உத்தியோகத்தர்களால் பரிசீலிக்கப்பட்டன.
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் சேர்க்கப்டாமல் இருந்த வாசிகளின் விபரங்கள் இன்று (18) பரீட்சிக்கப்ட்டன.
மாவட்டத்திலுமள்ள 14 பிரதேச செயலகப்பிரிலில் உள்ள விடுபடப்பட்டுள்ள வாக்காளர்களின் விபரங்கள் பரீட்சிக்கப்பட்டு செர்க்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment