மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் புகழ்பெற்ற விஷ்ணு ஆலயமான மாங்காடு சுயம்புலிங்க மஹா விஷ்ணு ஆலயத்தின் பாற்குடபவனியானது இன்று (19) ஞாயிற்றுக்கிழமை வெகுவிமர்சையாக இடம் பெற்றது.
ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இடம் பெற்று வரும் நிலையில் வருடம்தோறும் ஆலய உற்சவத்தினை சிறப்பிக்கும்முகமாக இவ்வாறு பாற்குடபவனி இடம் பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.
மாங்காடு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசைகள் இடம் பெற்று பால் குடங்களை ஏந்தியவண்ணம் அடியார்கள் சுயம்புலிங்க மஹா விஷ்ணு ஆலயத்தினை நோக்கி வருகைதந்தனர்.
இந்நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்கலென பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
ஆலயத்தினை பாற்குடபவனி வந்தடைந்ததும் ஆலயத்தில் விசேட பூசைகள் ஆலய பிரதம குரு தலைமையில் இடம் பெற்று, இதன்போது நாட்டில் சாந்தியும், நிரந்தர சமாதானமும் நிலவ வேண்டி வழிபாடுகள் இடம் பெற்றது. அதனை தொடர்ந்து அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
Post a Comment