முருகப்பெருமான் சூரனை சங்காரம் செய்து அதர்மத்தை அழித்து தர்மத்தினை நிலைநாட்டியதனை சித்தரித்து நிற்கும் (சூரன் போர்) கந்த சஷ்டி விரதமானது கடந்த (24) ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது.
அதன் அடிப்படையில் சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயு சுவாமி ஆலயத்தில் ஐந்தாவது நாளாகிய இன்று கந்த சஷ்டி விரதம் மிகவும் சிறப்பான முறையில் அனுஸ்டிக்கப்பட்ட்டது.
மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்காண பக்தர்கள் இங்கு விரதம் அனுஸ்டிக்க வருகை தருவதும் குறிப்பிடத்தக்கது.
நடைபெற்றுக்கொண்டிருக்கும் கந்தசஸ்டி விரத்தின் ஐந்தாம் நாளாகிய இன்று சித்தாண்டி மற்றும் அண்மித்த கிராமங்களின் ஆலயங்களுடாக சூரபத்மன் நகர்வலம் வந்து மக்களுக்கு காட்சிகொடுத்தார்.
இன்று நகர்வலம் சென்ற சூரன் கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளாகிய நாளை ஆறாம் (6) நாள் பிற்பகல் 3.00 மணியளவில் முருகப்பெருமானுடன் போர்புரியவுள்ளர்.
நாளை (29) புதன்கிழமை நடைபெறவிருக்கும் சூரன்போரை கண்டுகழிப்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வருகைதருவதும் வழமை> மக்களின் வருகையினை முன்னிட்டு ஆலய நிருவாகத்தினரால் பாதுகாப்பு ஒழுங்கு நடைமுறைகள் மற்றும் கலை நிகழ்வுகளும் சிறப்பான முறையிலே ஒழுங்குசெய்யப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.
Post a Comment