0
(வினோ)

திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பூநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளம்யுவதி நேற்றையதினம் (18) சனிக்கிழமை தனது கணவனுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக  விசமருந்தி தற்கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

திருமணம் முடித்து ஆறு மாதமே கடந்துள்ள நிலையில் நான்கு மாத கர்ப்பிணியான ரவிச்சந்திரன் பரிவாவினிக்கும்  அவரது கணவனுக்குமிடையில்  அண்மைக்காலமாக ஏற்பட்டுவந்த குடும்ப தகராறு காரணமாக நேற்றையதினம்       (அலறி விதை) விசமருந்தியிருந்ததை அறிந்த உறவினர்கள் கதிரவெளி வைத்தியசாலையில் அனுமதித்ததனைத் தொடர்ந்து அங்கிருந்து வாழைச்சேனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு இறுதியில் மேலதிக சிகிற்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு நேற்றைய தினம் இரவு 11.30 மணியளவில் சிகிற்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது பிரேதம் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை சேருவெல பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top