(சச்சு)
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது. இதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் வீட்டுக்கு ஓர் நூல் சேகரப்போம் எனும் தொனிப்பொருளில் நடைபவனியொன்று இடம்பெற்றது.
பாடசாலை வளாகத்திலிருந்து ஆரம்பமாகிய இந்நிகழ்வினை Battifm.com இணைய செய்தி மற்றும் வானொலி சேவையின் செய்தியாளர்களினால் ஒரு தொகை புத்தகங்கள் வழங்கி ஆரம்பித்துவைத்ததனைத் தொடர்ந்து, கல்லடி உப்போடை பழைய கல்முனை வீதி ஊடாக நொச்சிமுனை வரைக்கும் வீடு வீடாகச் சென்று புத்தகங்களையும், பூச்சாடிகளையும் பெற்றுக்கொண்டனர்.
இதன்போது கிடைக்கப்பெற்ற புத்தகங்களை பாடசாலையின் வாசிகசாலையில் பயன்படுத்தப்படவுள்ளதாகவும், கிடைக்கப்பெற்ற பூச்சாடிகளைக் கொண்டு பாடசாலை வளாகத்தினை அழகுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.
Post a Comment