பதுளை கொஸ்லாந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்துமுல்ல மீரியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற அனர்த்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலியை செலுத்துவதுடன் உடைமைகளையும் உறவுகளையும் இழந்த மக்களின் துயரில் பங்கு கொள்வதாகவும் அவர்களின் வாழ்க்கையை மீளவும் கட்டியெழுப்ப இறைவன் துணை நிற்க வேண்டும் எனவும் கிழக்கு மாகாண உறுப்பினரும் அம்பாரை மாவட்ட இணைப்பாளருமான கு.புஸ்பகுமார் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நமது நாட்டின் அபிவிருத்தியில் பாட்டாளிகளாக இருந்து செயற்பட்டுவரும் எமது உறவுகளுக்கு ஏற்பட்ட அனர்த்த செய்தி என்னை மட்டுமன்றி எம்மண்ணைச்சார்ந்த அனைத்து உள்ளங்களையும் வெகுவாக பாதித்துள்ளது.
இவ்வேளை அனர்த்தத்தினால் உயிர்களையும், உடமைகளையும் பறி கொடுத்த எனது உறவுகளின் துயரில் பங்கு கொள்வதுடன் உயிரிழந்த உறவுகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன். மிகவும் இக்கட்டான சூழலில் வாழும் மக்களுக்கு உதவி செய்ய அனைத்து மக்களையும் முன்வருமாறு அழைப்பு விடுக்கின்றேன்.
Post a Comment