(மன்மதன் & சச்சு)
மட்டக்களப்பு கல்லடியில் இயங்கிவரும் அரச சார்பற்ற ocean stars நிறுவனம் கடந்த ஏழுவருடமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் வறுமையான வாய் பேசமுடியாத தாய் தந்தையால் கைவிடப்பட்டவர்களை மகிழ்ச்ச்யூட்டும் முகமாக அண்மையில் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் வினோத விளையாட்டு நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தது.
இந்நிறுவனமானது பாலர் வகுப்பு முதல் உயர் தரம் வரைக்கும் கல்வி கற்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வறிய வாய் பேச முடியாத சிறார்களை தமது நிறுவனத்தினால் வழங்கப்படும் உதவி திட்டங்களுக்குள் உள்வாங்கப்பட்டவர்களுக்காக பல்வேறு உதவிகளை புரிந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
பல்வேறுபட்ட உதவிகளை புரிந்துவரும் இவ் நிறுவனம் வருடத்திற்கு ஒரு முறை ஐரோப்பாவில் இருந்து இங்கு வருகைதரும் இந் நிறுவன ஸ்தாபகர்கள் இங்குள்ள சிறுவர்களுடன் சேர்ந்து பல்வேறு கலை, கலாசார, விளையாட்டு நிகழ்வுகளை மேற்கொண்டு அவர்களுடன் நெருக்கமாக அனுபவங்களை பகிருவதுடன் நமது கலாசார நிகழ்வுகளுக்கும் முன்னுரிமை வழங்கி வருகின்றனர்.
இதன் போது இவ்வாறான சிறார்களிற்குள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் விதமான வினோத விளையாட்டுக்களை நிகழ்த்தியிருந்ததுடன், இந்நிகழ்வு சிறார்களை மையப்படுத்தி ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த போதிலும் அதிகளவிலான பெற்றோர்களும் இதில் பங்குபற்றியிருந்தமையினை எம்மால் அவதானிக்க முடிந்தது.
Post a Comment