0
(த.லோகதக்சன்)

ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிற்குள் டெங்கு நுளம்பு பெருக்கத்தை தடுக்கும் வகையில் பிரதேச சபை ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், வாழைச்சேனை பொலிஸ் நிலையம் என்பவற்றுடன் இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் சனிக்கிழமை ஓட்டமாவடி பிரதான வீதியில் ஓட்டமாவடி மேம்பாலத்தடியில் இருந்து ஓட்டமாவடி பசார் பள்ளிவாயல் வரையிலான வடிகான்கள் இரு பக்கமும் துப்பரவு செய்யும் நிகழ்வு இடம் பெற்றுது.

இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன, பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.ஏ.அன்வர், ஜூனைட் நளீமி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் அதிகாரிகள், பிரதேச சபை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



















Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top