(த.லோகதக்சன்)
வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் கேதார கௌரி விரதத்தின் இறுதி நாளான வியாழக்கிழமை விசேட பூசைகள் இடம்பெற்றது.
கடந்த 03ம் திகதி ஆரம்பமான கேதார கௌரி விரதம் 21 நாட்களாக அடியார்கள் விரதம் அனுஸ்டித்து வியாழக்கிழமை தோரணை அணிவித்து தமது விரதத்தினை நிறைவு செய்தனர்.
பத்திரகாளி அம்பாள் ஆலய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இவ்விரத பூசையின் போது ஆயிரக் கணக்கான பக்த அடியார்கள் அபிஷேகப் பூசை, வசந்த மண்டப பூசை மற்றும் தோரணை அணிவிக்கும் பூசைகளில் கலந்து கொண்டு தங்களுடைய விரத்தினை நிறைவு செய்து கொண்டனர்.
இதன்போது பத்திரகாளி அம்பாள் ஆலய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரனால் கேதார கௌரி விரதத்தின் மகிமை பற்றிய நற்சிந்தனை இடம்பெற்றது.
கேதார கௌரி விரத பூசைகள் யாவும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.எஸ்.முறசொலிமாறன் குருக்களினால் இடம்பெற்றது.
Post a Comment