“ ஜீவ சேவையே சிவ சேவை” என்று கூறிய சுவாமி விவேகானந்தர் தமது சீடர்களுக்கு, மாத்ருதேவோ பவ! பித்ருதேவோ பவ! தாயும் தந்தையும் தெய்வம் என்று படித்துள்ளாய். தரித்திர தேவோ பவ! மூர்க்கதேவோ பவ! ஏழையும், பாமரனும் தெய்வம் என்று நான் கூறுகின்றேன்.
ஏழை, முட்டாள், பாமரன், துயரப்படுபவன் இவர்கள் உனது தெய்வமாகட்டும். இவர்களுக்கு ஆற்றும் சேவையே உயர்ந்த தர்மம் என்பதைப் புரிந்துகொள், என்கிறார்.
எனவே ஒளிமயமான இத் தீபாவளித் திருநாளில் சுவாமிஜி அவர்களின் வழிகாட்டலில் “ஜீவ சேவையே சிவ சேவை” என செயற்படுவோம் என்று உறுதி கொள்வோம் எனக் கேட்டு, இன்றைய தினம் தீபாவளித் திருநாளினை கொண்டாடிகொண்டிருக்கும் இந்து மக்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை battifm.com ஊடாக தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர், புனித அன்னை ஸ்ரீ சாரதாதேவி, சுவாமி விவேகாநந்தர் ஆகியோரினது நல்லாசிகள் உங்கள் அனைவருக்கும் என்றும் மனஅமைதியையும், பிரகாசமான எதிர்காலத்தையும் நல்குவதாகுக.
இறைபணியில்,
(சுவாமி சதுர்புஜானந்தா)
Post a Comment