இலங்கையில் உள்ள அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கிடையிலான சுவர்ண புரவர விருது வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது.
இதில் மட்டக்களப்பு மாநகர சபை இரண்டு விருதுகளைப் பெற்றதுடன் 75 ஆயிரம் ரூபா பரிசிலும் ஜனாதிபதி அவர்களால் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் திரு எம். உதயகுமார் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி இரு விருதுகளும் விசேட தகமை அடிப்படையில் முகாமைத்துவக் கருவி அளவீட்டிற்கும் சிறந்த திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவத்துக்கும் வழங்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபையால் வழங்கப்பட்ட அதியுயர் விருதுகள் போட்டியில் கிழக்கின் உள்ளுராட்சி மன்றங்களுக்கிடையே மட்டக்களப்பு மாநகர சபை முதலாமிடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து பல உள்ளுராட்சி மன்றங்கள் மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் செய்து அவர்களது சிறப்பான நடைமுறைகளை அறிந்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் முல்லைத்தீவு பிரதேச சபை விஜயம் செய்ததை தொடர்ந்து செப்டம்பர் மாதம் மூதூர் பிரதேச சபை மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் செய்தனர் எதிர்வரும் சனிக்கிழமை (25.10.2014) பிரதேச சபை மட்டக்களப்பு மாநகர சபையின் பொது நூலகத்திற்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment