0
நேற்றைய தினம் அக்டோபர் 10 வெள்ளிக்கிழமையன்று 8 தமிழ் திரைப்படங்களும் 2 ஆங்கில டப்பிங் படங்களும் வெளியாகியுள்ள நிலையில் அவை தொடர்பான விபரங்களில் சில உங்கள் பார்வைக்கு...

 1. குறையொன்றுமில்லை

PATHWAY PRODUCTIONS சார்பில் கார்த்திக் ரவி எழுதி, தயாரித்து, இயக்கியிருக்கும் படம் இது. இதில் கீதன், ஹரிதா என்ற புதுமுகங்கள் ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கின்றனர். மேலும் ஹிட்லர், கிருஷ்ணா விஸ்வநாதன், சத்யமூர்த்தி, வினிதா, ஆர்.டி.பாலாஜி போன்றோரும் நடித்திருக்கின்றனர். அசோக்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரமணு இசையமைக்க.. நித்ய சங்கரி பாடல்களை எழுதியுள்ளார்.

2. ஆலமரம்

PEACOCK MOTION PICTURES இப்படத்தைத் தயாரித்துள்ளது. இதில் ஹேமந்த், அவந்திகா மோகன் இருவரும் ஹீரோ ஹீரோயினாக நடித்துள்ளனர். மேலும் சர்வேஷ், மெய்யப்பன், தவசி, அருள், திண்டுக்கல் அலெக்ஸ், ராஜ் விக்ரம், ஆறுமுகம், சிந்து, பெருமாயி போன்றோரும் நடித்துள்ளனர்.

ராம்ஜீவன் இசையமைக்க பா.விஜய், நந்தலாலா பாடல்களை எழுதியுள்ளனர். உதய்சங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கே.எம்.கே. பழனிவேல் எடிட்டிங் செய்துள்ளார். லாரன்ஸ் சிவா நடனம் அமைத்துள்ளார். எழுதி, இயக்கியிருக்கிறார் எஸ்.என்.துரைசிங்.

3. வெண்நிலா வீடு

ஆதர்ஷ் ஸ்டூடியோவின் சார்பில் பி.வி.அருண் தயாரித்திருக்கிறார். தி வைப்ரண்ட் மூவீஸ் வாங்கி வெளியிட்டிருக்கிறது.

இதில் மிர்ச்சிசெந்தில்குமார், விஜயலட்சுமி ஹீரோ-ஹீரோயினாக நடித்துள்ளனர் மேலும் மலையாள சினிமாவில் பிரபல நாயகியான சிருந்தா ஆசாப், ‘வழக்கு எண்முத்துராமன், பிளாக் பாண்டி, ‘சுப்ரமணியபுரம்சித்தன், ‘அவன் இவன்ராம்ராஜ் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு : டி. கண்ணன்இசை : தன்ராஜ் மாணிக்கம்பாடல்கள் : கபிலன் வைரமுத்து, வெற்றி மகாலிங்கம்எடிட்டிங் : சாபு ஜோசப் வி.ஜெகலை : ஜி. வீரமணிவசனம் : ஐந்து கோவிலான். கதை, திரைக்கதை எழுதி, இயக்கியிருக்கிறார் வெற்றி மகாலிங்கம்.

4. ஜமாய்

கிளாசிக்சின் சர்க்யூட் பட நிறுவனம் சார்பில் எம்.ஜெயக்குமார் இந்தப் படத்தைத் தயாரித்து கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.

இதில் நவீன், உதய் ஆகியோர் நாயகர்களாகவும், வைஜெயந்தி, நிமிஷா நாயகிகளாகவும் நடித்திருக்கின்றனர். மேலும் ராதாரவி, டி.பி.கஜேந்திரன், பாண்டு, ராஜப்பா, சங்கீதா பாலன், தீபிகா ஆகியோரும் நடித்துள்ளனர்.

எம்.டி.சுகுமாரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தினா இசையமைத்திருக்கிறார். அமரர் வாலி பாடல்களை எழுதியுள்ளார். கணேஷ் குமார் எடிட்டிங் செய்திருக்கிறார். ஜான்பாபு நடனம் அமைத்திருக்கிறார்.

5. குபீர்   


இந்தப் படம் ஒரே இரவில் நடக்கும் கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது. மொத்தமே 7 கதாபாத்திரங்கள்தான். இதில் திலீப், ஒயிட், தமிழ், ரவி, பிரதாப், பிரபு ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஹீரோயினோ அல்லது மற்ற கேரக்டர்களோ இல்லை.. சந்தோஷ் ஸ்ரீராம் ஒளிப்பதிவு. விஷால் ஆதித்தா இசையமைத்திருக்கிறார். எழுதி, இயக்கியிருக்கிறார் திலீப்.

6. யாவும் வசப்படும்

இலங்கை இந்தியக் கலைஞர்களின் கூட்டு முயற்சியில் முழுக்க முழுக்க லண்டனிலேயே தயாராகியிருக்கும் படம் யாவும் வசப்படும்’.

இத்திரைப்படத்தில் விஜித், தில்மிகா, பாலா, வைபவி, ரமேஷ், பாபி, டாக்டர் விவேக், ஆண்ட்ரு, கண்ணன், சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

என்.டி.நந்தா ஒளிப்பதிவு செய்ய ஆர்.கே.சுந்தர் இசை அமைக்க பாடல் வரிகளை தீபச்செல்வன் எழுதியுள்ளார். ஈழத்தைச் சேர்ந்த புதியவன் எழுதி, இயக்கியுள்ளார்.

7.  நீ நான் நிழல்

இதுவொரு மலேசிய இந்திய கூட்டு தயாரிப்பில் உருவாகியுள்ளம் திரைப்படம். இந்தப் படத்தில் சரத்குமார், மனோஜ் கே.ஜெயன், அஜ்மல், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். மலேசிய பெண் திசுந்தா இதில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஆல்பி-நஸீர் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். ஜெசின் ஜார்ஜ் இசையமைத்துள்ளார். ஜான் ராபின்சன் இயக்கி உள்ளார். ஸ்ரீமுத்தாரம்மன் பிக்சர்ஸ் இந்தப் படத்தினை வாங்கி வெளியிடுகிறது.

8. புளிப்பு இனிப்பு

மடிசார் மாமிஎன்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் உயர்நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக புளிப்பு இனிப்புஎன்று பெயர் மாற்றி வெளியாகிறது.
ஷில்பா மோஷன் ஒர்க்ஸ் வார்டு லைப் பிலிக் என்ற பட நிறுவங்கள் இணைந்து இந்த புளிப்பு இனிப்பு படத்தைத் தயாரித்துள்ளார்கள்.

மி‌துன்‌, ரி‌ஷி‌ பூ‌ட்‌டா‌ணி‌ இருவரும்‌ கதா‌நா‌யகர்‌களா‌க நடி‌க்‌க, இவர்‌களுக்‌கு ஜோ‌டி‌யா‌க மா‌ன்‌சி‌, மற்‌றும்‌ கா‌யத்‌ரி‌  நடி‌த்திருக்‌கி‌ன்‌றனர்‌. அஞ்‌சலி‌ என்‌கி‌ற சி‌றுமி‌ முக்‌கி‌ய வே‌டத்‌தி‌ல்‌ நடி‌க்‌க,  அவருடன்‌ நா‌ன்‌கு சி‌றுமி‌களும்‌ நடி‌த்‌துள்‌ளனர்‌.

ரவி‌பி‌ரகா‌ஷி‌ன்‌ கதை‌க்‌கு ரஞ்‌சி‌த்‌ போ‌ஸ்‌ தி‌ரை‌க்‌கதை‌ எழுதி‌ உள்‌ளா‌ர்‌. ரவி‌பி‌ரகாஷ்‌, ரஞ்‌சி‌த்‌ போ‌ஸ்‌ இருவரும்‌ இணை‌ந்‌து வசனம்‌ எழுதி‌ உள்‌ளனர்‌. அதே‌ போ‌ல ரஞ்‌சி‌த்‌ போ‌ஸ்‌ படத்‌தை‌ இயக்‌கி‌யதோடு அல்லாமல் படத்‌தொ‌குப்‌பையும்‌ செ‌ய்‌துள்‌ளா‌ர்‌. எல்‌.வி‌.கணே‌சன்‌ இசை‌யமை‌க்‌க, பா‌டல்‌களை‌ பழனி‌பா‌ரதி‌, யு‌கபா‌ரதி‌, முத்‌துவி‌ஜயன்‌ ஆகி‌யோ‌ர்‌ எழுதி‌ உள்‌ளனர்‌.

9. பொலிட்டிக்கல் ரவுடி – (தெலுங்கு டப்பிங் படம்)

பல மொழி மாற்று படங்களை தயாரித்த பட நிறுவனம் எஸ்.சுந்தரலட்சுமியின் சிவம் அசோசியேட்ஸ் நிறுவனம் தெலுங்கில் மிகப் பெரிய வெற்றி பெற்ற வஸ்தாது நா ராஜுஎன்ற பெயரில் வெளிவந்த படத்தை தமிழில் பொலிடிக்கல் ரவுடிஎன்ற பெயரில் மொழிமாற்றம் செய்கிறார்கள்.

இதில் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடித்திருக்கிறார். டாப்ஸி கதாநாயகியாக நடித்திருக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், சாயாஜி சிண்டே, பிரம்மானந்தம் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு எஸ்.கோபால் ரெட்டிஇசை மணி சர்மாபாடல்கள் தணிக்கொடி, புன்னியா, தமிழமுதன், சிபிசந்தர்வசனம் சிபி சந்தர்எடிட்டிங் இளங்கோஇணை இயக்கம் ராதாகிருஷ்ணன்கதை, திரைக்கதை, இயக்கம் ஹேமந்த் மதுகர்தயாரிப்பு எஸ்.சுந்தரலட்சுமி.

10. 2014 ருத்ரம் (ஆங்கில டப்பிங் படம்)

              
Bermuda Tentacles என்ற ஆங்கிலப் படம் 2014 ருத்ரம் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.



Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top