0
(அன்பழகன் குரூஸ்)     

கதிரவன் கலைக்கழகத்தின் முள்ளில் மொட்டுக்கள் எனும் குறும்படம் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய மண்டபத்தில் இன்று 27.10.2014 மாலை 04.00 மணிக்கு வெளியிட்டு வைக்கப்பட்டது.

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மண்முனைப் பிரதேச சபை புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்துடன், புதுக்குடியிருப்பு வாசகர் வட்டத்தினுடாக நடாத்திய பிரதேச மட்டப் பரிசளிப்பு விழாவில் மண்முனைப் பிரதேச சபைச் செயலாளர் திருமதி.கா.ஜெ.அருட்பிரகாசம்  முன்னிலையில் மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கப் பொருளாளர்  சைவப்புரவலர் வி.றஞ்சிதமூர்த்தியினால் இக் குறும்படம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பைச் சேர்ந்த த.யுவராஜ் என்பவரின் இயக்கத்தில் உருவான இக் குறும்படத்தை கூடல் அமைப்பின் செயலாளர் அ.அன்பழகன் குரூஸ் விமர்சனம் செய்து உரையாற்றியபோது, குறும்படத்தின் முக்கிய காட்சிப்புலங்களையும், படிமங்களையும் எடுத்துக்கூறி தொழில் நுட்பம் சார்ந்து விடயங்களையும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வுக்கு கதிரவன் த. இன்பராஜா தலைமை தாங்கினார். இந் நிகழ்வுக்கு முதன்மை அதிதியாக மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கப் பொருளாளாளரும்  சைவப்புரவலருமான வி.றஞ்சிதமூர்த்தி , சிறப்பு அதிதிகளாக, புதுவைத் தலைவர் திரு மா. சதாசிவம் அவர்களும், மட்.இந்து இளைஞர் பேரவைச் செயலாளர் சா.மதிசுதன் , கௌரவ அதிதிகளாக புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய அதிபர். வே.தட்சணாமூர்த்தி , மண்முனைப்பற்று கலாசார உத்தியோகத்தர் திருமதி.வளர்மதி ராஜ் , சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ரவிச்சந்திரன் , சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் அ.கிருபாகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 

வாசிப்பு மாதப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்கள் மற்றும் வெற்றி விருதுகள், சான்றிதழ்கள் என்பன மண்முனைப் பிரதேச சபையால் இந்நிகழ்வில் வழங்கப்பட்டன.

பொது நூலகர்களால் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ரவிச்சந்திரனின் சேவை பாராட்டிப் பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது முள்ளில் மொட்டுக்கள் குறும்படக் குழுவினரும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.







Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top