0


(கிருஷ்மன்)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மனைப்  பொருளாதாரம் மற்றும் போஷாக்கை மேம்படுத்தும் தேசிய திட்டத்திற்கமைய ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நடைபெற்ற பழக்கன்றுகள், தென்னங்கன்றுகள் நடும் 6ஆம் கட்ட ஆரம்ப நிகழ்வுகள் கண்ணகிகிராமத்தில் (20) திங்கட்கிழமை நடைபெற்றது.

திவிநெகும பிரதேச உத்தியோகத்தர் கே.நேசராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன கலந்து கொண்டு மரக்கன்றினை நட்டு வைத்தார். இதன்போது பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ரி.கிருபைராஜா, கணக்காளர் கே.கேசவன், திவிநெகும முகாமைத்துவப்பணிப்பாளர் த.பரமானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் 20 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள, 503 கிராம சேவகர்கள் பிரிவுகளில் இவ்வேலைத்திட்டம் ஆரம்பமாகி நடைபெறுகின்றமை குறிப்படத்தக்கது.

இதேவேளை ஆலையடிவேம்பு தெற்கு திவிநெகு சமுதாய அடிப்படை வங்கியிலும் முகாமையாளர் கே அசோக்குமார் தலைமையிலும் நிகழ்வுகள் நடைபெற்றது.





Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top