(த.லோகதக்சன்)
கல்குடா ஆட்டோ சங்கத்தின் 25வது நிறைவையொட்டி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் நிதியொதுக்கீட்டின் மூலம் முதலாம் கட்டமாக நூறு ஆட்டோ சாரதிகளுக்கு ஒரு சோடி டயர்கள் வீதம் செவ்வாய்கிழமை வழங்கப்பட்டது.
இதன்போது ஒரு சோடி டயர்கள் வீதம் ஐந்து இலட்சம்; ரூபாய் பெறுமதியான டயர்கள் 100 ஆட்டோ சாரதிகளிடம் கையளிக்கப்பட்டது.
ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் கல்குடா ஆட்டோ சாரதிகள் சங்கத்தின் தலைவர் ஏ.எல்.எம்.புஹாரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எம்.ஹமீட், பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் றுவைத் உட்பட கலர் கலந்து கொண்டனர்.
இதன் இரண்டாம் கட்டத்தில் நூறு ஆட்டோ சாரதிகளுக்கான டயர்கள் மிக விரைவில் கையளிக்கப்படுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி வாக்குறுதியளித்தார்.
Post a Comment