நாடு பூராகவும் வாசிப்பு மாதம் பிரகடனப்படுத்தப்பட்டு அனைத்து பிரதேசங்களிலும் உள்ள உள்ளூராட்சி மன்றங்களினாலும் அனுஸ்டிக்கப்பட்டு வருவதுடன், இது தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயலமர்வுகள், சேவைகள் என்பன நடைபெற்று வருகின்றன.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாநகர சபையினாலும் இவ்விடயம் தொடர்பான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு, செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாநகர சபையினால் வாசிப்பு மாதம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றைவரைக்கும் தமது மாநகர சபையினால் ஆற்றப்பட்ட சேவைகள் மற்றும் எதிர்வரும் தினங்களில் ஆற்றவுள்ள சேவைகள், திட்டங்கள் தொடர்பாகவும் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் நேற்றையதினம் (28) செவ்வாய்க்கிழமை ஏற்பாடுசெய்து தமது கருத்துக்களையும், ஊடகவியலாளர்களினால் சமூக பிரச்சனைகள் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வண்ணம் மாநகர சபை சார்பாக தனது கருத்துக்களையும் இதன்போது வெளியிட்டார்.
Post a Comment