0
(பொன்முடி) செங்கலடி நகர புரத்தை அண்மித்த மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைக்கூட்டமொன்று கரும்பு, வாழை மற்றும் தென்னை போன்ற பயிர்களைத் துவம்சம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம்  (18) சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தோட்டச்செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

செங்கலடி வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் குடியிருப்பு பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் இடம்பெற்றுள்ளதனால் அப்பிரதேச மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இச்சம்பவத்தில் உயிர் தப்பியமை பெரும் பேறாகக் கருதுவதாக மக்கள் கூறுகின்றனர்.

கடந்த காலங்களில் வயல் மற்றும் வயல் சார்ந்த பிரதேசங்களிலேயே காட்டுயானைகள் அட்டகாசம் புரிந்தன. தற்போது பொதுமக்கள் செறிந்து வாழும் நகரை அண்மித்த பகுதிக்குள் காட்டு யானைகள் வரத் தொடங்கியுள்ளமை துரதிஷ்டவசமானதென தெரிவிக்கப்படுகிறது.

இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுக்கப்படுகிறது.





Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top