0
(சச்சு)

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் மகாவித்தியாலயத்தின் ஆசிரியர் தின நிகழ்வு வித்தியாலய முதல்வர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் இடம் பெற்றது .

நன்றி மறப்பது நன்றல்ல அதை அன்றே மறப்பது நன்று  என்று சொல்லுவார்கள் ஆனால் அங்கு நன்றியினை அன்றே மறக்கமாட்டார்கள் ஏனென்றால் அங்கு நடைபெற்ற நிகழ்வுகள் வாழும் போதுவாழ்த்தப்படுபவர்கள் அதற்கு சான்றாகும்.

இவர்களை இந்த விவேகானந்த மகளிர் மகாவித்தியாலயமும்.முதல்வரும் தவறவிடுவதில்லை என்றுதான் சொல்லவேண்டும் இறந்த பின் ஒருவரை நாம் புகழ்ந்து பாடுவதை விட அவர் இருக்கும் போது அவரின் புகழ் பாடி அவரைகெளரவிப்பதுநல்லவிடையம்தான் அந்தவகையில் அப்பாடசாலையில் ஆசிரியையாககடமையாற்றி ஓய்வு பெற்று சென்ற ஆசிரியர்கள் கெளரவிக்கப் பட்டனர். அதே போன்று தற்போது கடமையாற்றும் ஆசிரியர்களும் கெளரவிக்கப்பட்டனர் உண்மையில் இந் நிகழ்வு ஒரு வித்தியாசமானது என்று கோட்டக் கல்வி அதிகாரி அவர்கள் குறிப்பிட்டார் 

இந்நிகழ்விற்கு இராமகிருஸ்ணமிஷன் சுவாமி சதுர்புஜானந்தாஜி மகாராஜ் அவர்கள் ஆசியுரை வழங்கினார் அதிதிகளாக ஓய்வு பெற்ற மேலதிக மாகாணகல்விப்பணிப்பாளர் எஸ்.மனோகரன் அவர்கள் பிரதம அதிதியாகவும் உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன் அதிதியாகவும் மண்முனை வடக்கு கோட்டக் கல்வி அதிகாரி ஏ.சுகுமாரன் ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் எம்.சச்சிதானந்தம் ஆகியோர் சிறப்பு அதிதியாகவும் சிகரம் கல்வி நிறுவன அதிபர் குணம் சவரிராஜா அழைப்பு அதிதியாகவும் கலந்து ஆசிரியர்களையும் வாழும்போது வாழ்த்தப்படுபவர்களையும் தரம் ஐந்து புலமைப் பரிசில் மாணவர்களையும் கெளரவித்தனர்.மாணவிகளின் பெருத்த கரகோஷத்திற்குமத்தியில் ஆசிரியர்களின் கலைநிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது 












Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top