0
(அன்பழகன் குரூஸ்)

இவ்வருடம் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வாகரைப் பிரதேசபையினால் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றன. 

அவற்றுள் மாணவர்களுக்கான போட்டி நிகழச்;சிகள், மாணவர்களுக்கு கதை கூறுதல், கையெழுத்துப் பிரதி வெளியிடல், கிராமங்களில் வாசிப்பு நிலையங்களை உருவாக்குதல்,  வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி கருத்தரங்குகளை நடாத்துதல், தேசிய வாசிப்புமாத கொடி விற்பனை, மற்றும் வாசகர்களிடையே நூல் சேகரித்தல் போன்றனவாகும். 


இதன் முதற்கட்டமாக மாணவர்களுக்கு கதை கூறும் நிகழ்வூ கடந்த 16.10.2014ம் திகதி கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் பிரதேசசபையின்  செயலாளர் சி.இந்திரகுமார் அவர்களின் தலைமையில் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் அ.ஹாரூன், அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன் ஆகியோரின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்றது. 

இந்நிழ்ச்சியினை நடாத்தி வைப்பதற்காக மட்டக்களப்பைச் சேர்ந்த பிரபல கதைகூறும் வித்துவான் மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் கலந்து சிறப்பித்து மாணவர்களுக்கு கதைகள் கூறி சிறார்களினதும், வாசகர்களினதும் பெரும் வரவேற்பை பெற்றார். 



அத்தோடு வாசிப்புமாத முக்கியத்துவம் பற்றியூம் மாஸ்டர் சிவலிங்கம் பற்றியூம் செயலாளர், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், பாடசாலையின் அதிபர் ஆகியோர் உரையாற்றினர். 



இந்நிகழ்வில் மாஸ்டர் சிவலிங்கம் அவர்களை கௌரவிக்கும் வகையில் சபையின் செயலாளரினால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். 
 

இந்நிகழ்வில் வாகரைப்பிரதேசத்தில் அமைந்துள்ள கதிரவெளி கனிஸ்ட வித்தியாலயம், கதிரவெளி மகாவித்தியாலயம், வம்மிவெட்டுவான் வித்தியாலயம், பால்சேனை வித்தியாலயம், கண்டலடி வித்தியாலயம், வாகரை மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்;ட மாணவர்கள் கலந்து  கொண்டு பயன்பெற்றமை சிறப்பம்சமாகும். 






Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top