(த.லோகதக்சன்)
மழை காலம் ஆரம்பித்துள்ளதால் நுளம்புப் பெருக்கத்தை தடுக்கும் நோக்கில் ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவில் உள்ள பாடசாலைகளை சுத்தம் செய்யூம் வேலைத்திட்டம் இடம் பெற்று வருகின்றது.
இதன் அடிப்படையில் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய பாடசாலை சூழல் சுத்தம் செய்யூம் நடவடிக்கை சனிக்கிழமை வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தலைமையில் இடம் பெற்றது.
ஓட்டமாவடி கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எல்.மீராசாகிபின் வழிகாட்டலில் நுளம்புப் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ் வேலைத்திட்டம் சனிக்கிழமை பாடசாலையில் இடம் பெற்றதாக வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்தார்.
இதன்போது பாடசாலை அதிபர்> ஆசிரியர்கள்> மாணவர்கள் கலந்து கொண்டு சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Post a Comment