0
(எரிக்)

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வுகள் அண்மையில் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பிரதம அதிதியாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் கே.சசிந்திரசிவகுமார் கலந்துகொண்ட நிகழ்வில் மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் அ.சுகுமாரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

முதல் நிகழ்வாக  ஆசிரியர்களுக்கு மலர்  மாலைள் அணிவித்து  கௌரவிக்கப்பட்டு பாடசாலையின் பிரதான மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

மங்கலவிளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் க.அருட்பிரகாசம் ஆசிரியர்களின் பணியின் மகத்துவம் பற்றி உரையாற்றினார்.

மாணவத்தலைவர்களினால் ஆசிரியர்களுக்கு நினைவுச்சின்னகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

இதன் போது புலமைப்பரிசில் பரீட்சையில் 09 மாணவர்கள் சித்தியடைந்திததும், ஆசிரியர்களுக்கு பிரதிபா பிரபா விருது கிடைத்ததும் இதுவே முதல் தடவையாகுமென பாடசாலை மேம்பாட்டுத்திட்ட இணைப்பாளர் கே.சசிந்திரசிவகுமார் பிரதிக் கல்விப் பணிப்பாளர்  ஆகியோர் தமது உரையில் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.












Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top