ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் கடந்தகாலங்களில் நிலவிய கடுமையான வறட்சியினால் பாதிக்கப்பட்டுத் தமது வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் உலக உணவுத் திட்டத்தின் அனுசரணையோடு உலர் உணவுப் பாதுகாப்பு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் முதல் அங்கமாகத் தருவிக்கப்பட்ட அரிசி நிவாரணம் வழங்கும் நிகழ்வு இன்று (24) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கடந்த கோடைகாலத்தில் தொடர்ந்து நிலவிய கடுமையான வறட்சியால் முழுமையாகப் பாதிக்கப்பட்டும், அத்துமீறிய வனவிலங்குகளின் தாக்குதல்களால் பயிர்நிலங்கள் சூறையாடப்பட்டும் தமது வாழ்வாதார வருமானங்களை இழந்து பாதிக்கப்பட்ட எல்லைக்கிராமமான அளிக்கம்பையில் வறுமைக்கோட்டின்கீழ் வாழும், திவிநெகும அபிவிருத்தித் திணைக்கள (சமுர்த்தி) உதவி பெறுகின்ற குடும்பங்களுக்கு சுமார் 15,800 கிலோகிராம் அரிசி நிவாரணமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டது.
குறித்த நிவாரணத்தைக் கிரமமாக விநியோகிக்கும் வேலைகளில் ஆலையடிவேம்பு பிரதேச இடர் முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.தனராஜனுடன் இணைந்து குறித்த கிராமத்திற்கான கிராம உத்தியோகத்தர் கே.லோகநாதன், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பாக்கியராஜா மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எல்.திருமுருகன் ஆகியோர் பணியாற்றியிருந்தனர்.

Post a Comment