0
(பொன்முடி) கிழக்கு இலங்கையில் பிரசித்தி பெற்ற முருக ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விரதம் இன்று ஐப்பசி 7ம் நாள் (24.10.2014) வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. 

சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலா என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது அங்கு நடைபெறும் கந்த சஷ்டி விரதம். அந்த வகையில் வருடா வருடம் நடைபெறும் கந்த சஷ்டி விரத நாட்களில் பக்தர்கள் நாட்டின் நாலாபக்கத்திலிருந்தும் வருகைதந்து விரதம் அனுஸ்டிப்பது இங்கு வழமையாகவுள்ளது. 

இன்று (24) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகி தொடர்ந்து ஐந்து நாட்கள் கந்த சஷ்டி விரத ப10சைகள் மற்றும் விழாக்கள் நடைபெற்று இறுதி நாளாகிய ஆறாம் நாள் ஷண்முக அர்ச்சனையுடன் 30.10.2014 (வியாழக்கிழமை) பாறணைப் ப10சையும் அன்று மாலை திருக்கல்யாணமும் நடைபெற்று நிறைவடையவுள்ளது.
  
ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் நடைபெறும் கந்த சஷ்டி விரத இறுதி நாளில் (29) நடைபெறும் சூரன்போர் மற்றும் அன்று இரவுவேளையில் கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளமை குறிப்படத்தக்கது.


Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top