0
(அன்பழகன் குரூஸ்)    

 மட்டக்களப்பு மாநகர சபையின் அனுசரணையுடன் மட்டக்களப்பு செங்கதிர் இலக்கிய வட்டம் கோவிலூர் செல்வராஜனின் "இல்லாமல் போன இன்பங்கள்" எனும் நூலினை இன்று 25.10.2014 கலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில்  அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.


இந் நிகழ்வினை செல்வி க.தங்கேஸ்வரி ( தொல்லியலாளர் ) தலைமை தாங்கி நடத்தினார். பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் திரு.மா.உதயகுமார் அவர்களும், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.க.பாஸ்கரன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு தமிழ் சங்க தலைவர் திரு.செ.எதிர்மன்னசிங்கம், கொழும்பு தமிழ் சங்க செயலாளர் திரு.த.சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா) ஆகியோரும் கலந்துகொண்டனர்.  செங்கதிரோன் த.கோபலகிருஷ்ணன் அறிமுகவுரை வழங்கினர்.



நூல் நயவுரை கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை தலைவர் திருமதி.ரூபி வலன்றினா பிரான்சிஸ் அவர்கள் சிறந்த முறையில் வழங்கினார். இந்நூல் புலம்பெயர் தேசங்களில் நாம் இழந்த பல விடயங்களை கூறுவதாக நயவுரையில் கூறினார்.



நூலாசிரியர், பாடகர் இரா.தெய்வராஜனுடன்  இணைந்து மண்ணின் பாடல்கள் சிலவற்றைப் பாடி பங்குபற்றியவர்களை மகிழ்வித்தனர். 








Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top