உலகெங்கிலும் எபோலா நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை 10,000 ஐத் தாண்டியுள்ளதுடன், இந்த ஆட்கொல்லி 4,922 பேரை பலிகொண்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
சியரா லியோன், லைபீரியா, கினியா ஆகிய மூன்று நாடுகளில் எபோலாவின் தாக்கம் தீவிரமானது. அவற்றிற்கு அப்பால், 27 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
பத்து மரணங்களைத் தவிர, ஏனைய அனைத்து மரணங்களும் சியரா லியோன், லைபீரியா, கினியா ஆகிய நாடுகளில் நிகழ்ந்தவையாகும்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிந்திய நிலவர அறிக்கைக்கு அமைய, 2,705 மரணங்களுடன் கூடுதலாக பாதிக்கப்பட்ட நாடாக லைபீரியா திகழ்கிறது. சியரா லியோனில் 1,281 பேரும், கினியாவில் 921 பேரும் மரணித்துள்ளனர்.
நைஜீரியாவில் எட்டு மரணங்கள் பதிவாகியுள்ளன. மாலியில் ஒருவரும், அமெரிக்காவில் மற்றொருவரும் பலியாகியுள்ளனர்.
படங்கள் – பிபிசி
Post a Comment