சர்வதேச ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு தி/மூ/ஸ்ரீ சண்பக மகா வித்தியாலய ஆசிரியர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றார்கள் இணைந்து ஏற்பாடு செத்திருந்த நிகழ்வு வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
ஈச்சிலம்பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.லோகராஜா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக பழைய மாணவர் சங்கத் தலைவர் ஆசிரியர் பா.தயாபரன் ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களைப் பாராட்டி நினைவூச்சின்னம் வழங்கி கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் , பாடசாலை நலன்விரும்பிகலென அதிகளவிலானோர் கலந்துகொண்டனர்.
.jpg)


Post a Comment