(எஸ்.பி.நாதன்)
மட்டக்களப்பு நகரில் அதிகரிக்கும் விபத்துக்களை தடுக்கும் நோக்கொடு பாதைகளின் அருகில் உள்ள அடர்த்தியாக வளரும் மரங்களை வெட்டி துப்பரவு செய்யும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (18) இடம்பெற்றது.
வளைவான பாதைகளின் அருகில் அமைந்துள்ள அடர்த்தியான மரங்களால் எதிர் திசையில் வரும் வாகனங்கள் தெரியாமல் உள்ளதனால் விபத்துக்கள் அதிகரிப்பதாக மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் என். சசிநந்தன் தெரிவித்தார்.
திணைக்களத்தின் ஊழியர்களைக் கொண்டு பார் வீதியில் உள்ள சீலா முனைச் சந்தியிலிருந்து பாலமீன்மடு வெளிச்ச வீடு வரை துப்பரவாக்கும் வேலைகள் இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அண்மைக் காலமாக மட்டக்களப்பு நகரில்; விபத்துக்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment