மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பிரதேசத்தில் வீடொன்றின் கூரையை உடைத்து 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் உடமைகள் கடந்த 15/10/2014 அன்று கொள்ளையிடப்பட்திருந்ததாக முறைப்பாடு கிடைத்ததனைத் தொடர்ந்து வெகுவிரைவாக செயற்பட்ட காத்தான்குடி பொலிசார் இதனுடன் தொடர்புடைய இரண்டு பிரதான சந்தேகநபர்களை நேற்றைய தினம் (22) கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
நாவற்குடா அம்பாள் வீதியைச்சேர்ந்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொலன்நறுவை நிறைவேற்று பொறியியலாளரான வி.சுரேஸ்குமார் என்பவரின் இல்லத்திலேயே இக்கொள்ளைச்சம்பவம் இடம் பெற்றுள்ளதுடன்
இதன்போது 46 பவுண் நகைகள், 1 லெப்டப், 2 நொக்கியா கையடக்க தொலை பேசிகள் உட்ப்பட பல பொருட்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச்சென்றுள்ளதாக அவற்றை தற்போது மீட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்திருந்தனர்.
சம்பவ தினத்தன்று மாலை 6.45 மணிக்கும் 8.45 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் வீட்டைப்பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்குச்சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டுக்கூரை உடைக்கப்பட்டு கொள்ளை இடமபெற்றிருந்தாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்திருந்தது.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளைத் தொடர்ந்து இன்று (22) காலை இதனுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் , இரண்டாவது சந்தேகநபர் வாழைச்சேனையில் தலைமறைவாகி இருந்ததை தொடர்ந்து அவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நேற்றைய தினமே மாலை 4.00 மணியளவில் கைதுசெய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களினால் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகள் நகை அடகுவைக்கும் கடைகளில் இருந்து பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய பொருட்கள் நிலத்தின் கீழ் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
திருட்டு சம்பவத்தினைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உப்பாலி ஜெயசிங்க தலைமையில் மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த அகமான , காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி IP ஆரியவந்து வேதகெதர ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் காத்தான்குடி உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி IP வசந்த ரணசிங்க , மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி SI ரகீம் , குற்றப் பிரிவு அதிகாரி SI உப்பாலி தர்மசிறி , PC இகலகம , ஜயசிங்க, பத்மநாதன், ரொபின், திசாநாயக ஆகியோரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே திருட்டுடன் சந்தேகிக்கப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரையும் கைது செய்து தடுத்துவைத்துள்ளதாகவும் , இன்றைய தினம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தார்கள்.
Post a Comment