0
29.10.2014 அன்று இலங்கை பதுளைமாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களுக்கு அவசர நிவாரண உதவியை புலம்பெயர் தமிழர்களிடமிருந்து வேண்டுகிறோம்.


தோட்டத் தொழிலாளர்களான இம்மக்கள் வாழ்வு முழுவதும் வறுமையோடு வாழ்பவர்கள். இயற்கையும் இவர்களை வஞ்சித்து இன்று அநாதரவாக்கப்பட்டுள்ளார்கள்.

மனிதர்கள் வாழக்கூடிய அடிப்படை வசதிகளையே இழந்து வாழும் இவர்களின் தற்போதைய அவலத்தில் புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து உதவுமாறு பிரான்ஸ் பாடுமீன் அபிவிருத்தி நிறுவனம்  வேண்டுகிறது.

கொஸ்லாந்த சிறீ கணேசா வித்தியாலயத்தில் இடம்பெயர்ந்து வாடும் மக்களின் எண்ணிக்கை விபரம் :-

12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் – 82 (பெண்குழந்தைகள்)
100 –ஆண்குழந்தைகள் 12வயதிற்கு உட்பட்டோர்.
150 குடும்பங்கள்.
மொத்தம் 572 பேர் தங்கியுள்ளனர்.

உனகல தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெயர்ந்து வாடும் மக்களின் எண்ணிக்கை விபரம் :-

41 பெண் குழந்தைகள்
33 ஆண் குழந்தைகள்.

மொத்தம் 297 பேர் தங்கியுள்ளனர்.

எங்கள் சகோதர உறவுகளான இம்மக்களின் துயர் துடைக்க வேண்டுகிறோம். ஓவ்வொருவரும் தங்களால் இயன்றவு உதவியை நல்குங்கள். சிறுதுளி பெருவெள்ளமாகும்.

குழந்தைகளுக்கு தேவையான போர்வைகள். 

ஒருபோர்வையின் விலை – 600ரூபா.
256 குழந்தைகளுக்கு – 153600.00ரூபா. (அண்ணளவாக யூரோ 930€)
பால்மா – ஒன்றின் விலை – 375.00ரூபா
256 குழந்தைகளுக்கு – 96000.00ரூபா. (அண்ணளவாக யூரோ 581€)
பிஸ்கெட் – ஒரு பெட்டி விலை – 500.00ரூபா.
256 குழந்தைகளுக்கு – 128000.00ரூபா(அண்ணளவாக யூரோ 775€)
நூடுல்ஸ் – 256பெட்டி – 64000.00ரூபா (அண்ணளவாக யூரோ 387€)
கடலை 256 கிலோ – 46080.00ரூபா ((அண்ணளவாக யூரோ 280€)

மொத்தம் தேவையான உதவி :- 2944€.

உதவிகளை வழங்க விரும்புவோர் கீழ்வரும் வங்கியிலக்கம்
C I c bank 00020051501
Fr7630066102260002005150179 I b a n
7rue John Lennon 95370 Montigny les cormeilles
France.

Telephone: 0033652169528
sfadsparis@mail.com
http://www.singingfishfrance.com/
பாடுமீன்  சமூக அபிவிருத்தி  நிறுவனம்
முகவரி:16 a André Clément
95370 Montigny les cormeilles
France

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top