0
2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடை பெறவுள்ள இந்து இறுதிநிலைப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் அறநெறி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான ஒருநாள் பயிற்சி கருத்தரங்கு இன்று இடம்பெற்றது.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் மட்டக்களப்பு நாவற்குடா, இந்துகலாசார நிலையத்தில் இன்று 01-11-2014 திகதி காலை 09.00 மணியளவில் அபிவிருத்தி உதவியாளர் எழில்வாணி பத்மகுமாரின் ஏற்பாட்டில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் ஹேமலோஜினி  குமரன் தலைமையில் ஆரம்பமாகியது.

மங்கள விளக்கேற்றப்பட்டு ஆரம்பமாகிய இந்நிகழ்வில் சிவயோகச் செல்வன் சாம்பசிவம் சிவாச்சாரியாரின் ஆசியுரை இடம்பெற்று, மேலும் அவரினால் பரிட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான விரிவுரைகளையும் நிகழ்த்தியிருந்தார்.

அறநெறி பாடசாலைகளூடாக இறுதி நிலைப்பரீட்சைக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் அனைவரும் கலந்து கொண்டதுடன், இதன்போது அறநெறிப் பாடசாலைகளின் பிரச்சனைகள் ஆராயப்பட்டதுடன், அறநெறிப்பாடசாலைப் பாடத்திட்டத்தில் மாற்றம் தொடர்பான விடையங்களும் ஆராயப்பட்டது. 

இதன்போது திணைக்களத்தினால் இவ்வாண்டு தேசியரீதியில் நடாத்தப்பட்ட பொது அறிவுப் போட்டிப் பரீட்சையில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது. அனைத்து அறநெறிப்பாடசாலைகளின் பொறுப்பாசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்வில்  அபிவிருத்தி உதவியாளர் குணநாயகம் மற்றும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும்அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். இதன்போது சைவப்புலவர் எஸ்.துஷ்யந்த் ஆசிரியரினாலும் விரிவுரைகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

















Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top