நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி க.பிறேமகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விரிவுரையாளர்கள் மாணவர்கள் மற்றும் நிறுவக ஊழியர்கள் அனைவரும் பங்குபற்றியிருந்தனர்.
முதலாவது சுடரை பணிப்பாளர் ஏற்றியதைத் தொடர்ந்து விரிவுரையாளர்கள் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மாணவர்களால் அனைவருக்கும் கறுப்புப் பட்டி அணிவிக்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில் கொஸ்லந்தை பிரதேசத்தில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பான காணொளியும் காண்பிக்கப்பட்டது.
இந்த மனிதாபிமான நிவாரண மற்றும் நிதி சேகரிப்புத் திட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கான போக்குவரத்து அனுமதி உட்பட சகல வசதிகளையும் செய்து தருவதாக பணிப்பாளர் தெரிவித்ததுடன் அது தொடர்பான ஆவணத்திலும் அவ்விடத்திலேயே கையெழுத்திட்டார்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து மாணவர்கள் குழுக்காளாக பிரிந்து பல்கலைக்கழகம் உட்பட வெளிப் பகுதிகளில் நிதி மற்றும் நிவாரண சேகரிப்பு பணிகளில் தற்பொழுது ஈடுபட்டுள்ளனர்.
Post a Comment