0
(ஆனந்த்)

அவசர திருத்தவேலைகளின் காரணமாக நாளை (21-10-2014) செவ்வாய்க்கிழமை  காலை 7.00 மணி தொடக்கம் இரவு 7.00 மணி வரை 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென இலங்கை நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அக்கரைப்பற்றுப் பிராந்திய அலுவலகத்தினால் இன்று அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை  மற்றும் மாவடிப்பள்ளி  ஆகிய பிரதேசங்களில் இந்நீர்வெட்டு நாளை (21) நீர் வழங்கல் தடைப்படுமென அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதற்கமைய குறிப்பிட்ட பிரதேசங்களில் இலங்கை நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீர் இணைப்பைப் பயன்படுத்தும் பொதுமக்கள் இதுதொடர்பான முன்னாயத்தங்களை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top