0

(எஸ்.பி.நாதன்)

ஆணவம் அதிகரித்ததால் அதர்மம் அழிந்து தர்மம் மேலோங்கியதை விளக்கும் சூரசம்ஹாரம் இலங்கையில் பெரும்பாலான இந்து ஆலயங்களில் நடைபெற்றன.

முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிதை விளக்கும் சூரன்போர் கல்லடி உப்போடை நொச்சிமுனை பிள்ளையார் பேச்சியம்மன் ஆலயத்தில் இன்று புதன்கிழமை மாலை  (29) நடைபெற்றது.

கந்தஷஸ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று விரதகாரர்களும், பக்தர்களும் கலந்து முருகப் பெருமானால் சூரன் வதை செய்யப்பட்டதை பார்த்து மகிழ்ந்தனர்.

ஆறு நாட்கள் கொண்ட கந்தஷஸ்டி விரதக் கிரியைகளை ஆலய பிரதம குரு சோமசுந்தரக் குருக்கள் தலைமையில் இடம்பெற்றன.













Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top