'உலகெலாம்....' என்ற புதிய சிந்தனையை தரும் ஆன்மிகம் சார்ந்த நூல் வெளிவருகின்றது. இந்த நூலை மட்டுநகர் வந்தாறுமூலையைப் பிறப்பிடமாகக் கொண்ட ராகுல் நாயுடு எழுதியுள்ளார். புத்தகம் என்ற சொற்பதத்திற்கு அமைய 'புத்தம் புதிய சிந்தனை' என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. உலகெலாம் என்ற தனது நூலைப்பற்றி தனது கருத்துரையில் ராகுல் நாயுடு எழுதியுள்ளதாவது. திருமந்திரம், தம்மபதம், பைபிள், திருக்குர் ஆன், பகவத்கீதை, சித்தர்கள் பாடல் என்பவற்றில் இருந்து வாசகர்களுக்காக எடுத்துக்காட்டி உள்ளதாகவும் ராகுல் நாயுடு கூறியுள்ளார்.
உள்விருந்தாக பூச்சியத்தில் தனது முதல் அத்தியாயத்தை தொடங்குவதாகவும் அதாவது, (0) உலகில்... மனிதன்... பதிலைத் தேடுகிறான்.... எனத்தொடங்கி வழிபாடு, கடவுள், சமயங்கள், மனிதன்,கர்மம், விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும், பிரபஞ்சமும் கொள்கைகளும், உணவு, அறிவு, அன்பே தியானம், உலகெலாம் உள்ளிட்ட அத்தியாயங்கள் உள்ளன.
உலகில் பல மதங்கள் தோன்றியிருக்கின்றன. யார் யார் எப்படி வழிபட்டாலும் தேடலின் போது வெளிப்படுவது ஒரு பொருளே! அதுவே பரம்போருள். அதனோடு நாம் இணைந்தால் அதுவே அறிபொருள். விந்து உருவாகி, கருவாகி, உருப்பெற்று வளர்ந்து மானிடனாகி, நோயுற்று மூப்பெய்தி மரணம் நேரும் போது பிணம். நாம் தேடிய பொருள் நம்பிடம் உள்ளது.
நாம் தேடும் அந்த பொருள் கருவில் கூடியிருந்தது. அதை நம்மில் பலர் கழித்து விடுவதனால் உண்மையை உணராமல் தவிக்கிறோம். அதைப் பெருக்கிவிடுபவர்கள் உண்மையை உணர்ந்தவராவர்ளூ இதனை இஸ்லாம் அவர் மறுமை வீட்டைத் தேடிக்கொண்டவர் எனவும், கிறிஸ்தவம் அவர் மரணத்தை விட்டு நித்திய ஜீவனுக்கு உட்பிரவேசிக்கின்றார் எனவும், பௌத்தம் பரிநிர்வாணம் அடைந்து விட்டார் எனவும், சனாதனதர்மம் மோட்சம் அல்லது சிவமாகிவிட்டார் எனவும் எடுத்துரைக்கின்றன. ஒவ்வொரு மனிதனின் இலக்கும் தன்னை உணர்ந்து சமயங்களின் புனித நூல்கள் விபரிக்கும் பரிசுத்தமான நிலையை அடைவதேயாம். இதுவே மனித வாழ்வின் இறுதி இலக்காக இருக்கவேண்டும். இறைவனை உணர்ந்த மகான்களும் எமது முன்னோர்களின் துணைகளுமே இந்த நூல் வெளிவரக் காரணம் என்பதும் நூலாசிரியரின் கருத்தாகும்.
கலாபூஷணம் பொன்.தவநாயகம், பேராசிரியர் சி.மௌனகுரு, எழுத்தாளர் செல்வி தங்கேஸ்வரி, விஸ்வ பிரமம் வை.இ.எஸ்.காந்தன் குருக்கள், சுவாமி வேதானந்த ஆனந்தா, மௌலவி அல்ஹாஜ் எம்.ஜெ.எம்.இல்யாஸ், வணக்கத்திற்குரிய பாஸ்டர் எம்.பி.தயாளன், சட்டத்தரணி கி.துரைராசசிங்கம், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கி.கோபிந்தராஜா, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சால்ஸ் ஆகியோரது ஆசிச்செய்திகளுடன் உலகெலாம்... என்ற நூல் வெளிவருகின்றது என்பது சுட்டிக்கட்டவேண்டியது. ஆன்மீக நூல்கள் பல வெளிவந்திருந்தாலும் வித்தியாசமான முறையில் வாசகர்களை சிந்திக்க தோன்றும் ஒரு நூலாக ராகுல் நாயுடுவின் இந்நூல் அமைந்துள்ளது என்பது ஆசிவழங்கியோரது கருத்தாகும். தோடர்புகளுக்கு : 0773117228, ulakelaam1@Gmail.com. Skype- rahul8090
அகத்தியன்
Post by Rahul Kanna.
Post a Comment