மட்டக்களப்பு கல்லடிக் கடற்கரையில் கிளாத்தி இனத்தைச் சேர்ந்த மீன்கள் இறந்த நிலையில் இன்று திங்கட்கிழமை (27) கரையொதுங்கியதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.
கரையோர கற்பாறைகள் மற்றும் புற்படுக்ககைகளில் காலநிலை, வெப்பநிலை மாற்றத்தின் காரணமாக ஒட்சிசின் குறைவடைவதன் காரணமாக நீரில் ஏற்படும் குளிர்ச்சியினால் மீன்கள் இறப்பதாக நாரா நிறுவனம் தெரிவித்ததாக மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு இவ்வாறு இடம்பெற்றதாகவும் இதனால் கடல் மற்றும் வாவி உணவுகளை உண்பதால் எந்தப் பாதிப்பும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேபோன்று நேற்று ஞாயிற்றுக்கிழமையும் (26) கல்லடி. காத்தான்குடி கடற்கரைகளில்சிவப்பு நண்டுகள் மற்றும் மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதாகவும் கூறினார்.
Post a Comment