0

(எஸ்.பி.நாதன்)

டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு இன்று திங்கட்கிழமை (27) கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபை மற்றும் எஸ்.ரி.ஏ. சொலிடறிரி பவுண்டேசன்  எற்பாட்டில் நடாத்தப்பட்ட இக்கருத்தரங்கில் 275 மாணவர்கள் பங்கேற்றனர்.

சிவானந்தா தேசிய பாடசாலை, விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயம், கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயம், மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயம், பூநொச்சிமுனை அல் - இக்ரா வித்தியாலயம், உப்போடை சென் திரேசா மகளிர் பாடசாலை மாணவ மாணவிகள் இதில் பங்கேற்றனர்.

சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் எஸ். சர்வேஸ்வரன், ஆசிரியர்களான குருபரன், மினோன் பார்த்லெட் அகியோர் மாணவர்களுக்கான கருத்தரங்கை நடாத்தினர்.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபை தலைவர் வ. கமலதாஸ், எஸ்.ரி.ஏ. சொலிடறிரி பவுண்டேசன் வெளிக்கள இணைப்பாளர் ஜே. ரஞ்சித்குமார், சூழலியல் விஞ்ஞானம் கேம்பிறிஜ் பல்கலைக்கழகம்- கலாநிதி திருச்செல்வம் மற்றும் சிவானந்தா தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் எஸ். தரணீஸ்வரானந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.













Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top