(புதியவன்)
அண்மையில் ஒரு ஊடகத்தின் வாயிலாக என்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தமிழ் தேசியத்தை துண்டு துண்டாக உடைப்பதற்கு முயற்சிக்கும் சில தீய சக்திகளின் சதிவேலை என மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் சேயோன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இணையத்தளம் ஒன்றில் மட்டக்களப்பில் மீண்டுமொரு துரோகம் கோத்தாவுடன் இருட்டில் சேயோன் என தலைப்பிட்டு எழுதப்பட்டிருந்த செய்தி தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே சேயோன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்
கடந்த பல ஆண்டுகளாக வடகிழக்கை பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை துண்டு துண்டாக உடைப்பதற்கு மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. அந்த முயற்சியின் இறுதிக்கட்ட தாக்குதலே என்மீது குறித்த இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வங்குரோத்து அரசியல் நடத்தும் சிலரின் ஊடாக என்னை ஓரங்கட்டுவதற்கும் என்னை ஓரங்கட்டுவதன் ஊடாக தங்களது இருப்பை தக்கவைத்துக் கொள்ளலாம் என நினைக்கும் தமிழ் தேசிய வாதிகளை பயன்படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைப்பதற்கான முயற்சியே என்மீதான குற்றச்சாட்டாகும்.
தமிழ் தேசியத்திற்கோ தமிழ் மக்களுக்கோ துரோகம் ஒன்றை செய்கின்ற அல்லது செய்த குடும்பத்தில் இருந்து வந்தவன் அல்ல நான் எங்களது குடும்பம் தமிழ் தேசியத்திற்காகவே இன்றுவரை பணியாற்றிக் கொண்டிருக்கின்றது.
பணத்திற்காக நான் கோத்தாவுடனோ அல்லது வேறு புலனாய்வு அமைப்புக்களுடனோ தொடர்பினை வைத்துக்கொள்ளும் அளவுக்கு கீழ்தரமானவன் நான் இல்லை அவ்வாறு பணத்திற்காக செயற்படுவதாக இருந்தால் நான் என்றோ அரசுடன் சேர்ந்து சுகபோகம் அனுபவித்திருக்க முடியும்.
தமிழ் தேசியத்தின் மீது மிகுந்த ஈடுபாடுகொண்டு அதற்காகவே என்னை அர்ப்பணித்து பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டதுடன். மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணிப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு இளைஞர்களை ஒருங்கிணைத்து செயற்பட்டு வருகின்றேன்.
இன்நிலையில் இன்றுவரை என்மீது எந்தக் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டதில்லை குறிப்பாக இப்போது குறித்த இணையத்தளம் ஊடாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு எனக்கு மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுவும் தன்னை தமிழ் தேசிய இணையத்தளம் போல் காட்டிக்கொள்ளும் குறித்த இணையத்தளம் தமிழ் தேசியத்தை உடைப்பதற்கான செய்தியிணை சம்மந்தப்பட்ட என்னுடனோ என்னுடைய கட்சி தலைமைமையிடமோ கலந்தாலோசிக்காது தான்தோன்றித்தனமாக குறித்த செய்தியை வெளியிட்டமையானது குறித்த இணையத்தளத்தின் உண்மைத் தன்மையையும் அது குறித்து தமிழ் மக்களுக்கு இருந்த நம்பிக்கையையும் இல்லாமல் செய்துள்ளதுடன்.
குறித்த இணையத்தளம் தமிழ் தேசியம் என்ற போர்வைக்குள் நின்று கொண்டு தமிழ் தேசியத்தை சிதைப்பதற்கான புலனாய்வாளர்களால் நடத்தப்படும் இணையத்தளமா? என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.
அவ்வாறு குறித்த இணையத்தளம் தமிழ் தேசிய இணையத்தளமாக இருந்தால் குறித்த செய்தியை தமிழ் தேசியம் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு தங்களுக்கான சுயநல அரசியலை முன்னெடுக்கின்றவர்களின் கருத்துக்களை உள்வாங்கியே என் மீது இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்க முடியும்.
எனவே குறித்த இணையத்தளத்திற்கும் என் மீதான குற்றச்சாட்டுக்களை பிரசுரிக்கச் சொன்னவர்களுக்கு மட்டுமே இந்த செய்தியை ஏன் பிரசுரித்தோம் என்று தெரியும். அவர்களின் நோக்கம் என்னை தமிழரசு கட்சியில் இருந்து ஒதுக்கவேண்டும் என்பதும் எனக்கு தெரியும்.
நான் தேவாரத்தை படித்துவிட்டு போய் ஒருபோதும் கோயிலை இடிக்கமாட்டேன் அந்த பழக்கம் எமக்கு கிடையாது. ஆனால் சம்மந்தப்பட்ட இணையத்தளமும் அதனூடாக இந்த செய்தியை பிரசுரித்தவர்களும் படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோயில் என்பதை போல் செயற்பட்டுள்ளனர்.
அதாவது தமிழ் தேசியத்தை வைத்து இணையத்தளம் நடத்துவதும் பின்னர் தமிழ் தேசியத்தை உடைப்பதற்கு உதவுவதுமே இவர்களின் வேலையாகவுள்ளது.
என்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருந்தால் அதனை சம்மந்தப்பட்டவர்கள் நிறுபித்துக் காட்டுவதுடன் அதனை எமது தலைமைக்கு தெரியப்படுத்தினால் எமது தலைமை என்ன முடிவெடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.
நான் ஒழுக்கமான தமிழ் தேசிய அரசியல் நடத்துபவன் என்ற வகையில் நானோ அல்லது என்னை வைத்து வேறுயாராவது தமிழ் தேசியத்தை உடைப்பதற்கு முயற்சித்தால் அதற்கு நான் ஒரு போதும் இடமளிக்கமாட்டேன்.
எனவே அன்பான தமிழ் மக்களே இனியும் இதுபோன்ற கூற்றச்சாட்டுக்கள் என் மீதோ அல்லது எமது கட்சியை சேர்ந்த வேறுயார் மீதும் முன்வைக்கப்பட்டால் அது குறித்து அவதானமாக இருப்பதுடன் அதைநம்பவேண்டாம் எனக் கூறி தொடர்ந்தும் நாம் தமிழ் தேசியத்தின் வழி சென்று எமக்கான விடுதலையை வென்றெடுப்போம். எனக் கூறினார்.

Post a Comment