மட்டக்களப்பில் நாளை 27-10-2014 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் 31-10-2014 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை மின்சாரத் தொகுதிகளின் பராமரிப்பு பணிகளின் பொருட்டு மேற்கொள்ளவுள்ளதாக பகல்நேர மின்வெட்டு தொடர்பான அறிவித்தலினை இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெறவிருக்கும் இப்பிரதேசங்களில் காலை தொடக்கம் மாலை வரையிலான மின் வெட்டு கீழ் குறிப்பிடப்படும் அட்டவணைக்கு அமைவாக அமுல்படுத்தப்படும் என்பதனை பொதுமக்கள் நலன்கருதி முன்னாயத்த ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு அறியத்தருகின்றனர்.
குறித்த பிரதேசத்தில் அமுல்படுத்தப்படவுள்ள மின்வெட்டு தொடர்பான மேலதிக விபரங்களை குறிப்பிட்ட அலுவலகத்தின் தொலைபேசி இலக்கமான 065 222 4439 அல்லது 065 222 2639 இற்கு அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.
இல | திகதி | நேரம் | இடம் |
1. | 2014.10.27 | 8.30 – 17.00 | சின்ன ஊறணி, இருதயபுரம் கிழக்கு தொடக்கம் இருதயபுரம் மேற்கு வரையுள்ள பகுதி |
2. | 2014.10.28 | 8.30 – 17.00 | சுமைதாங்கியடி, விமானப்படைத்தளப் பகுதி, சேற்றுக்குடா, திமிலதீவு, புதூர் மற்றும் வவுணதீவு, பாலமுனை, கோயில்குளம், சிகரம், ஒல்லிக்குளம், மண்முனை, கீச்சான்பள்ளம், மாவிலங்குதுறை, மதுராபுரம், தாளங்குடா மற்றும் வேடர் குடியிருப்பு |
3. | 2014.10.30 | 8.30 – 17.00 | சின்ன ஊறணி, இருதயபுரம் கிழக்கு தொடக்கம் இருதயபுரம் மேற்கு வரையுள்ள பகுதி |
8.30 – 18.00 | நடராஜானந்தபுரம், புதுமண்டபத்தடி, கழிமடு, இருநூறுவில், பாவற்கொடிச்சேனை, இருட்டுச்சோலைமடு, புளியடிமடு, பாலக்காடு, கரடிப்பூவல், முல்லாமுனை, காந்திகிராமம், கண்ணகி கிராமம், காளை போட்டமடு, புளியடிமடு மற்றும் பருத்திச்சேனை. | ||
4. | 2014.10.31 | 8.30 – 17.00 | மண்டூர் மற்றும் பாலைவேம்பு |
Post a Comment