0
(கிருஷ்மன்)

பதுளை கொஸ்லாந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்துமுல்ல மீரியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற அனர்த்தத்தில் உயிரிழந்த எம் உறவுகளுக்கு அஞ்சலியை செலுத்துவதுடன் உடைமைகளையும் உறவுகளையும் இழந்த மக்களின் துயரில் பங்கு கொள்வதாகவும் அவர்களின் வாழ்க்கையை மீளவும் கட்டியெழுப்ப இறைவன் துணை நிற்க வேண்டும் எனவும் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினர் இன்று (30) வெளியிட்ட தங்களது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

இயற்கையின் இக்கொடுர தாண்டவத்தில் லயன்களில் வாழ்ந்த 150மேற்பட்ட வீடுகள் மற்றும் ஆலயம் ஒன்றும் புதையுண்டமையானது மனித நேயம் கொண்ட அனைவரையும் அதிர்சியில் ஆழ்த்தியுள்ளதாக மன்றத்தின் தலைவர் வே.சந்திரசேகரம் குறிப்பிட்டார்.

மேலும் இவ் அனர்த்தத்தில் சகல விதமான முறைகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆலய அறங்காவலர் சபையினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் சார்பிலும் தெரிவிப்பதுடன் தம் பிரதேச மக்களால் முடிந்த உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.


Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top