(த.லோகதக்சன்)
மட்டக்களப்பு வந்தாறுமூலை, வேக் கவுஸ் வீதி புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (28) செவ்வாய்க்கிழமை வந்தாறுமூலை மேற்கு பொதுமக்கள் சார்பில் ஊர் பிரதிநிதிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தார்.
மாகாண சபை உறுப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண வீதி அமைச்சின் மூலமான 1.4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டினால் இவ்வீதியானது புனரமைப்பு செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
Post a Comment