0

(எஸ்.பி.நாதன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடியில் அலைபேசிக் கடை ஒன்று உடைத்து அலைபேசிகள் திருடப்பட்டது தொடர்பாக  ஞாயிறு மாலை பெண்ணொருவரைத் தாம் கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி அலைபேசிக் கடையிலிருந்த இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பெறுமதியான அலைபேசிகள் கடந்த 2014.09.27 ஆம் திகதியன்று திருட்டுப்போனதாக கடை உரிமையாளர் விஜயகுமார் மேரதன் ஏறாவூர்ப் பொலிஸில் முறையிட்டிருந்தார்.

ஆதனடிப்படையில் விசாரணை செய்து வந்த ஏறாவூர் பொலிஸார் கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பட்டியடிச்சேனை எனுமிடத்தில் வசிக்கும் பெண்ணொருவரைக் கைது செய்ததோடு திருடப்பட்டவற்றில் சில அலைபேசிகளையும் கைப்பற்றியிருப்பதாக பொலிஸ் அதிகாரி ஆர். புருஷோத்தமன் தெரிவித்தார்.

இத்திருட்டோடு சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களான கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவரும், சகோதரனும் தலைமறைவாகியிருப்பதாகவும் அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையினை தாம் மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸ் அதிகாரி புருஷோத்தமன் மேலும் கூறினார்.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top